Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களனி கங்கையில் நீராட சென்ற நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 17:33 GMT, Apr 17, 2018 | Published: 16:34 GMT, Apr 17, 2018 |
0 Comments
1490
This post was written by : Anojkiyan

கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில், களனி கங்கையில் நீராட சென்ற நாடக நடிகையொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில் இச்சம்வம் நடந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான, கண்டி-புப்புரஸ்ஸ பகுதியை சேர்ந்த துஷானி த சில்வா என தெரியவந்துள்ளது. இவர் தொலைக்காட்சி நடிகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, நீராடச் சென்றிருந்த வேளையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் சடலம், குடும்ப உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் கடுமையான தேடலின் பின்னர், நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறு தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, உயிரிழந்த யுவதியின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக கிதுல்கல வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg