Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 17 பேர் படுகாயம்

In இலங்கை
Updated: 16:41 GMT, Apr 17, 2018 | Published: 16:41 GMT, Apr 17, 2018 |
0 Comments
1165
This post was written by : Anojkiyan

வெலிமடை-கெப்பட்டிபொல பகுதியில் இரு வான்கள் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் 7 பேர் வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு, 10பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில், கெப்பட்டிபொல சந்தியில் நிகழ்ந்துள்ளது.

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் கதிர்காமம் பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற வான் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கதிர்காமம் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றுமொரு வான் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வான் சாரதிகளையும் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg