Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மௌனம் கலைந்தார் பசில்!

In இலங்கை
Updated: 10:19 GMT, Apr 19, 2018 | Published: 10:18 GMT, Apr 19, 2018 |
0 Comments
1512
This post was written by : Risha

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்களும், துணை சபாநாயகரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பதினாறு பேரும் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்தன.

அதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg