Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலா நெருக்கடி: பொருளாதாரத்தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பு

In உலகம்
Updated: 10:37 GMT, Apr 19, 2018 | Published: 10:37 GMT, Apr 19, 2018 |
0 Comments
1042
This post was written by : Suganthini

வெனிசுவேலாவில் ஜனநாயகச் செயற்பாடுகள் சீர்குலையும் பட்சத்தில், அந்நாட்டில் மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ  அறிவித்துள்ளார். ஆனால், இந்தத் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக, அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் நிலவும் குழப்ப நிலைமை தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஃபெட்ரிக்கா மொஹெர்னி (Federica Mogherini)  இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வெனிசுவேலாவின் தேர்தல் நிலைமைகளை ஐரோப்பிய ஒன்றியம் மிக உன்னிப்பாகக் கவனிக்கும். அத்துடன், வெனிசுவேலாவின் ஆட்சி நிலைவரம், மனிதாபிமான நிலைவரம் உட்பட ஜனநாயகச் செயற்பாடுகள் சீர்குலையும் பட்சத்தில், அந்நாட்டில்  நாம் பொருளாதாரத்தடைகளை விதிக்க நேரிடும்’ என்றார்.

மேலும், வெனிசுவேலாவின் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடைபெற அந்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார்.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ ஆட்சியில் பொருளாதார ஸ்திரமின்மை காணப்படுவதுடன், சமூக நெருக்கடியும் காணப்படுகின்றது. அந்நாட்டு மக்கள் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதுடன், பாதுகாப்பின்மையையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg