Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு!

In இந்தியா
Updated: 10:52 GMT, Apr 19, 2018 | Published: 10:52 GMT, Apr 19, 2018 |
0 Comments
1151
This post was written by : Ravivarman

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு திசைத்திருப்பினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி. குழு அமைக்கப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரிகளான எஸ்.பி.ராஜேஸ்வரி மற்றும் முத்துசங்கரலிங்கம் தலைமையிலேயே இக்குழு இன்று (வியாழக்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சர்ச்சை தற்போது தமிழக கல்லூரிகளையும் கடந்து அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகள் நால்வருக்கு தவறான பாதைக்கு திசை திருப்பும் வகையில் அழைப்பு விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ள கணிதபாட பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பிலான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் செய்த முறைப்பாட்டுக்கமைய கடந்த இரண்டு நாட்களாக பொலிஸாரினால் இவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

இந்நிலையிலேயே இவ்விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இன்று சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் மாணவிகளை, இவர் தவறாக வழிநடத்தும் வகையில் தொலைபேசியூடாக பேசிய குரல்பதிவு, சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg