Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 11:31 GMT, Apr 19, 2018 | Published: 11:30 GMT, Apr 19, 2018 |
0 Comments
1065
This post was written by : Yuganthini

இரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை இடம்பெறவுள்ளது.

குறித்த மே தின நிகழ்வுகள் கிளிநொச்சி, முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

அன்றையத் தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி, எழுச்சிப் பேரணி பிரதான வீதி வழியாக நகர்ந்து முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்து பின்னர் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டு சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளன.

இதன்போது கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில் 28 வருடங்களாக தமது சொந்த இடத்திற்குப் போவதற்காகப் போராடி வரும் மக்களது வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வரும் அவர்களது உறவுகளுக்கு நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமிழ் தேசிய மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மே தின நிகழ்வுகள் தொடர்பான முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் வடமாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை  கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச, வட்டார அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg