Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்

In உலகம்
Updated: 11:26 GMT, Apr 19, 2018 | Published: 11:26 GMT, Apr 19, 2018 |
0 Comments
1038
This post was written by : Suganthini

தென்மேற்கு கொலம்பியாவின் காட்டுப்பகுதிகளில் கொலம்பிய மற்றும் ஈக்குவடோர் துருப்புகள் நேற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.

ஈக்குவடோரைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களும் அவர்களின் வாகன சாரதியும் கிளர்ச்சிக்குழு ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த கிளர்ச்சிக் குழுவை தேடும்; முயற்சியாக மேற்படி கூட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடத்தப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான விவரங்கள் எவையும் வெளியாகவில்லை.

குறித்த இரு ஊடகவியலாளர்களும் கடத்தப்பட்டமை தொடர்பான வீடியோ பதிவை கடந்த செவ்வாய்க்கிழமை கிளர்ச்சிக் குழு வெளியிட்டிருந்தது. எனினும் அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் உயிரோடு இருப்பதற்கான ஆதாரமாகவே அந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஈக்குவடோர்-கொலம்பிய எல்லையிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் தொலைதூர பகுதிகளில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக கருத்துரைத்த கொலம்பிய இராணுவ தளபதி, இந்த தேடுதல் நடவடிக்கை தொடரும் என்றார்.

இவ்வாறிருக்கையில் கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மனுவல் சன்டோஸ் ஈக்குவடோருக்கான முழு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg