Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது அரசியல் செயற்பாடு அல்ல: ஸ்ரீரங்கேஸ்வரன்

In இலங்கை
Updated: 16:50 GMT, Apr 19, 2018 | Published: 16:50 GMT, Apr 19, 2018 |
0 Comments
1068
This post was written by : Ravivarman

ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல. அது ஒரு மனிதாபிமான நிலைப்பாடு என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘தமிழ் அரசியல் கைதியாகச் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனந்த சுதாகரன் விரைவில் விடுதலை செய்யப்பட்டு நிர்க்கதியாகியுள்ள அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம். ஆனந்த சுதாகரனின் விடுதலையை ஒரு அரசியலாக பார்க்காது அதை ஒரு மனிதாபிமான நிலைப்பாடாக பார்க்கவேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg