Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

400 கோடி ரூபாய் வருமானம் குவித்த சதொச நிறுவனம்!

In இலங்கை
Updated: 16:57 GMT, Apr 19, 2018 | Published: 16:57 GMT, Apr 19, 2018 |
0 Comments
1059
This post was written by : Ravivarman

தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படும் காலப்பகுதியில் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் சதொச நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச கிளைகள் மூலம் 40 சதவீத விலைக்கழிவு வழங்கப்பட்டதால் அதிகளவான வாடிக்கையாளர்களை கவர்ந்திருந்தது.

பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை கிளைகள் முழுமையாக கூடுதலான நேரம் திறந்து வைக்கப்பட்டதாகவும் இன்று வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் திருமதி இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg