Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க.-உடன் இணைந்து அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி தயார்!

In இலங்கை
Updated: 06:51 GMT, Apr 20, 2018 | Published: 06:34 GMT, Apr 20, 2018 |
0 Comments
1455
This post was written by : Risha

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுமாயின், ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படின், சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னர் இது தொடர்பாக இறுதி தீர்மானமொன்று எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg