Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருந்தெருக்கள் அதிகார சபையின் செயற்பாடு குறித்து கிழக்கு ஆளுநர் கவலை!

In இலங்கை
Updated: 07:18 GMT, Apr 20, 2018 | Published: 07:17 GMT, Apr 20, 2018 |
0 Comments
1057
This post was written by : Risha

மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி சேதமடைந்துள்ளமை குறித்து பெருந்தெருக்கள் அதிகார சபையின் செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம விமர்சித்துள்ளார்.

கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு கல்வடியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”சீன நிறுவன ஒப்பந்தகாரர்களினால் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியானது தற்போது உடைந்து போக்குவரத்து செய்யமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் வாகரை பிரதேசத்தில் சுமார் 50 கிலோமீற்றர் தூரம் பழுதடைந்து உடைந்து காணப்படுகின்றது. இந்த வீதியால் சுமார் நாளொன்றுக்கு 5 ஆயிரம் வானங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் இந்த வாகரைப் பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் 15 நிமிடம் பிந்தியே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது

பெருந்தெருக்கள் அதிகார சபை மக்களுக்கு இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக நான் கலையடைகின்றேன். அது தொடர்பாக மத்திய அரசு கவனம்செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இனிவரும் மழைகாலங்களில் இன்னும் சேதமடைந்து மிகமோசமான நிலை ஏற்படும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg