Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் பாரிய விபத்து!

In இலங்கை
Updated: 11:55 GMT, Apr 20, 2018 | Published: 07:32 GMT, Apr 20, 2018 |
0 Comments
1322
This post was written by : Risha

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் வானின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஐவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த டிப்பரின் சாரதி உட்பட இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொலநறுவையில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு வேகமாக கல்முனை நோக்கிவந்த டிப்பர் வாகனமும், ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வானுமே மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் ஓந்தாச்சிமடத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg