Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுநலவாய மாநாடு: அடுத்த தலைவராக இளவரசர் சார்ள்ஸ் நியமனம்!

In
Updated: 09:05 GMT, Apr 20, 2018 | Published: 09:05 GMT, Apr 20, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைத் ஆரம்பித்துவைத்த பிரித்தானிய மகாராணி எலிஸபெத், தனக்குப் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பாரெனக் கூறியுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு, லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் பொதுநலவாயக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இளவரசர் சார்ள்ஸ் அமர்வது தனது விருப்பமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயக் கூட்டமைப்பின் தலைவர் பதவி, பாரம்பரியம் சார்ந்தது இல்லையென்பதால், மகாராணியின் மரணத்துக்குப் பின்னர் இயல்பாக வேல்ஸ் இளவரசருக்கு இப்பதவி கிடைக்காது.

மேலும், 53 நாடுகளின் அரச தலைவர்களும் இன்று சந்திக்கும்போது, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இந்த அமைப்பின் தலைவர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டுமெனவும், ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg