Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சியாளர்களை சிவில் சமூகம் எச்சரிக்க வேண்டும்: ஜெஹான் பெரேரா

In இலங்கை
Updated: 09:52 GMT, Apr 20, 2018 | Published: 09:43 GMT, Apr 20, 2018 |
0 Comments
1063
This post was written by : Yuganthini

எந்த சமூகத்தின் மீதும் வன்முறை ஏற்படுத்துவதனை ஏற்க முடியாது என்பதை சிவில் சமூகம் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்க வேண்டுமென, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

சமகால நாட்டு நடவடிக்கைகளில் சிவில் சமூகத்தின் பணி தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாட்டு மக்கள் அனைவரும் சமமாக நிருவகிக்கப்படவும் கண்ணியமாக நடத்தப்படவும் வேண்டும். ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை.

பல்லினத் தன்மையில் சம அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் எமது நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அம்பாறை, கண்டி சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.

இதன்போது கண்டி சிவில் சமூகம், வலிமை அதிகாரம் இல்லாத சந்தர்ப்பத்திலும் குறியீட்டு ரீதியிலான வல்லமையை வைத்துக் கொண்டு கலவர நேரத்தில் திறன்பட செயற்பட்டார்கள்.

மேலும் குறித்த கலவரம் தொடர்பில் உண்மை நிலையை ஊடகங்களுக்கு கூறி இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரி நின்றார்கள்.

இவ்வாறு கண்டியிலுள்ள சிவில் சமூகத்தைப்போல நாட்டிலுள்ள ஏனைய சிவில் சமூகங்களும் செயற்பட வேண்டும். என்பதுடன் சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

மேலும்  ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக சிவில் சமூகம் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இதனால் தனியாகச் சிந்திக்காமல் சிவில் சமூகம் ஆண் பெண், சமூகம் என பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபடும் போது, எந்த சவால்களையும் முறியடிக்க முடியும்.

இலங்கையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறாமை தான் பிரச்சினைகள் அதிகமாக எழுவதற்கு காரணம். இவ்விடயங்கள் தொடர்பில் சிவில் சமூகம் தயாராக இருந்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசைத் தூண்டலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg