Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொரணை தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை!

In இலங்கை
Updated: 13:19 GMT, Apr 20, 2018 | Published: 11:48 GMT, Apr 20, 2018 |
0 Comments
1092
This post was written by : Yuganthini

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற ஹொரணை, பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, மேல் மாகாண அமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையை  இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் சென்று  பார்வையிட்டுள்ளார். பின்னர் தொழிற்சாலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

இப்பிரதேச மக்கள் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு மற்றும் விச வாயு காரணமாக  பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூடுவதே இம்மக்களின் வாழ்வுக்கு சிறந்ததாக அமையுமெனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று குறித்த தொழிற்சாலையைிலிருந்து வெளியேறிய விச வாயு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் சுவாசக் கோளாறு காரணமாக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg