Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

In இலங்கை
Updated: 14:10 GMT, Apr 20, 2018 | Published: 14:10 GMT, Apr 20, 2018 |
0 Comments
1066
This post was written by : poovannan

தேசியம் தொடர்பில் ஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் மக்களின் நலன்களுக்காக இணைய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எங்கள் மண்ணை மக்களை பாதுகாக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும். எமது மண்ணில் தனித்துவத்துடன் நாங்கள் வாழ வேண்டுமானால் சரியான தலைமைத்துவம் தேவை. இத்தலைமை மிக விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆகவே எதிர்கால மாகாண சபை தமிழ தேசிய சிந்தனை கொண்டவர்களால் ஆளப்பட வேண்டும். கொள்கையால் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம்.

தற்போது ஆட்சி அமைத்துள்ள சபைகள் ஒற்றுமையாக செயற்படுமென்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து சபைகளுமே ஸ்திரமற்ற சபைகளாக உள்ளன. மாகாண சபை ஸ்திரமாக இருந்தால்தான் இதனை திறமையான சபைகளாக கொண்டு நடாத்த முடியும்.

மக்கள் போராட்டத்தினாலேயே காணி விடுவிப்புக்கள் உட்பட சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. ஆகவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அமைப்பு தேவை” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg