Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 14:27 GMT, Apr 20, 2018 | Published: 14:27 GMT, Apr 20, 2018 |
0 Comments
1132
This post was written by : poovannan

காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ௯ட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும் புத்தளம் தில்லையடியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு முன்பாக “தில்லைடி மக்கள்” எனும் அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “மோடி இதுவா உன் நீதி”, “சிறுவர்களுக்கு எங்கே பாதுகாப்பு”, “வித்தியாவுக்கு கிடைத்த நீதி வேண்டும்”, “சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்போம்”, “ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதத்தை உடனே நிறுத்து”, “ஐ.நா.வே உடன் தலையிட்டு ஆஷிபாவின் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுக்கொடு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நசீர் மற்றும் முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உட்பட்ட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg