Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி

In இலங்கை
Updated: 15:26 GMT, Apr 20, 2018 | Published: 15:26 GMT, Apr 20, 2018 |
0 Comments
1042
This post was written by : poovannan

லண்டன் நகரிலுள்ள லென்கெஸ்டர் இல்லத்தில் இடம்பெற்ற டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத்தை திறந்துவைக்கும் விழாவின்போது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டார்.

சுகாதாரத்துறைக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் பொதுநலவாயக் கொள்கை சட்டமூலத்திற்கு அமைவாக பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபையில் இந்த டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபை மற்றும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக இடம்பெற்ற இக்குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

இந்த டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத்தின் தலைவராக பேராசிரியர் வஜிரதிசாநாயக்க தலைமைதாங்கியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg