Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத் தூதுவரின் நிகழ்வு

In இலங்கை
Updated: 16:20 GMT, Apr 20, 2018 | Published: 16:19 GMT, Apr 20, 2018 |
0 Comments
1044
This post was written by : poovannan

வவுனியாவில் புதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத்தூதுவர் இன்று (வெள்ளிக்கிழமை) இந்துமா மன்றத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வவுனியா இந்துமா மன்றத்தினரின் அழைப்பிலேயே வவுனியாவிற்கு வருகை தந்த துணைத்தூதுவர் பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்துமா மன்றக்கட்டிடத் தொகுதிக்கு வருகைதந்து அதன் நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, துணைத்தூதுவரிடம் வவுனியாவில் 13 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவுள்ள இந்துமா மன்றத்தின் வரைபடம் மற்றும் மதிப்பீடு என்பனவும் கையளிக்கப்பட்டிருந்தன.

இதன்போது முன்னாள் துணைத்தூதுவராக கடமையாற்றியவர் செய்த உதவிகள் உட்பட இந்துமா மன்றத்தின் தேவைகள் குறித்து இந்திய துணைத்தூதுவரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg