Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் பண்பாட்டு விழா

In இலங்கை
Updated: 18:24 GMT, Apr 20, 2018 | Published: 18:24 GMT, Apr 20, 2018 |
0 Comments
1048
This post was written by : poovannan

கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பண்பாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 2.30 மணியளவில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவலல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடனேயே இப்பண்பாட்டு விழா இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், நாதஸ்வர இசையுடன் விழா ஆரம்பமாகியது. மேலும், கலைஞர்களின் நடன நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இந்நிகழ்வில் கலைஞர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

முதன்மை விருத்தினராக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் வட. மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளருமான உடுவை எஸ்.தில்லை நடராசா, வட. மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg