Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க லிபரல் கட்சி கோரிக்கை

In
Updated: 07:35 GMT, Apr 21, 2018 | Published: 07:35 GMT, Apr 21, 2018 |
0 Comments
1184
This post was written by : Suganthini

பிரெக்சிற் தொடர்பாக புதிய வாக்கெடுப்பு பிரசாரத்தை தான் முன்னெடுக்கவுள்ள நிலையில், அதற்கு ஆதரவு வழங்குமாறு பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் வின்ஸ் கேபிள் (Vince Cable) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் தேசிய கட்சியிடமே, லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் பிரித்தானிய அதிகாரிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இறுதி வெளியேற்ற உடன்படிக்கையில், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென்று தமது கட்சி விரும்புவதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரெக்சிற்றுக்குப் பின்னர் பிரித்தானியாவின் குடிவரவுக்;கொள்கை தொடர்பான முன்மொழிவு எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படுமென, டௌவிங் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தோருக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கும் வகையில் குடிவரவுச் சட்டமூலம் நிறுவப்படுமெனவும், தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg