Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதிக்கு எதிராக செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சி

In இலங்கை
Updated: 09:58 GMT, Apr 21, 2018 | Published: 09:58 GMT, Apr 21, 2018 |
0 Comments
1204
This post was written by : Varatharajan Yuganthini

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி திரட்டியதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் கூட்டு எதிரணியின் ஆதரவினையும் அவர்கள் கோரியிருந்தனர்.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவடைந்து செயற்படும்போது எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஜனாதிபதி மைத்திரியும் இவ்விடயத்தை அறிந்தே நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg