Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் பாரிய விளைவுகள் ஏற்படும்: எச்சரிக்கும் விமல்

In இலங்கை
Updated: 11:19 GMT, Apr 21, 2018 | Published: 11:19 GMT, Apr 21, 2018 |
0 Comments
1290
This post was written by : Yuganthini

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை நீக்குவது சிறந்த விடயமல்லவென, தேசிய முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடு நாட்டில் அதிகளவான பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது வடக்கு, கிழக்கை தனிநாடாக வரதராஜன் பெருமாள் அறிவித்தபோது, மாகாண சபையை கலைத்து ஆளுநரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையே காரணமென சுட்டிக்காட்டினார்.

ஆனால் ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி 20ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதெனவும் தெரிவித்தார்.

அத்துடன் கூட்டு எதிரணியின் ஆதரவினை பெற மக்கள் விடுதலை முன்னணி முயன்று வருகின்றது. இவ்விடயத்துக்கு கூட்டு எதிரணி ஆதரவு தெரிவிக்குமாயின் அதற்கு எதிராக தேசிய முன்னணி குரல் கொடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg