Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர்: தமிழக ஆளுநர்

In இந்தியா
Updated: 11:24 GMT, Apr 21, 2018 | Published: 11:24 GMT, Apr 21, 2018 |
0 Comments
1067
This post was written by : Risha

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொண்டுவரவே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்தாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

மேலும், ஆளுநராகிய தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் தலையீட்டில் விசாரணைகள் இடம்பெறுவதை தி.மு.க. எதிர்த்துவரும் நிலையிலேயே இக்கருத்தினை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நிர்மலாதேவியின் விவகாரம் குறித்து விசாரணைகளை நடத்த மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தினாலேயே, தான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்ததாக ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விசாரணைகள் எவ்விதத்திலும் ஏனைய விசாரணைகளுக்கு இடையூறாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, தனக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எவ்வாறாயினும் தான் இதுவரை அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg