Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை!

In இந்தியா
Updated: 11:29 GMT, Apr 21, 2018 | Published: 11:29 GMT, Apr 21, 2018 |
0 Comments
1152
This post was written by : Risha

பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பிலான சட்டத்துக்கு மத்திய அரசங்கம் அனுமதியளித்துள்ளது.

காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைகளைத் தொடர்ந்தே இந்த அவசர சட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசங்களில் சிறுமிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமையானது, இந்தியா முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததன.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோஷம் நாடளாவிய ரீதியில் ஓங்கியொலித்த நிலையிலேயே, இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசாங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த புதிய சட்டத்துக்கிணங்க, 12 வயதுக்குட்பட்ட சிறார்களை துஷ்பிரயோகம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg