Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியில் தொடரும் குறைபாடுகள்: பொன்சேகா ஆதங்கம்!

In இலங்கை
Updated: 16:47 GMT, Apr 21, 2018 | Published: 15:40 GMT, Apr 21, 2018 |
0 Comments
1177
This post was written by : Ravivarman

நல்லாட்சி அரசாங்கத்தில் குறைபாடுகள் இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மக்களுக்களின் தேவைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமே சிறப்பான ஆட்சியினை மக்களுக்கு வழங்க முடியும்.

இல்லையெனில் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விடுவார்கள். இதனால் ஆட்சியில் உள்ள கட்சிக்குள் பிரச்சினைகள் தோன்றும்.

மேலும், அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும் அமைச்சரவைக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் கெட்ட நேரமாக இருந்துள்ளனர்’ என அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg