Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் 31ஆக உயர்வு (2ஆம் இணைப்பு)

In உலகம்
Updated: 08:59 GMT, Apr 22, 2018 | Published: 08:59 GMT, Apr 22, 2018 |
0 Comments
1160
This post was written by : Suganthini

ஆப்கானிஸ்தானிலுள்ள தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் 31ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 57 பேர் படுகாயமடைந்துள்ளதாக, அந்நாட்டு பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு நிலையத்துக்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் ஒக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர், அடையாள அட்டைகள் இல்லாத பொதுமக்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்படி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட வேளையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி நிலையத்தை நெருங்கிய தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததாகவும் இதன்போது, 12 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், 57 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்தச் சம்பவத்தின்போது, மேற்படி நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் அவ்விடத்தில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பு உரிமை கோரவில்லை. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக டுவீட்டரில் பதிவிட்டுள்ள தலிபான் அமைப்பினர், இந்தத் தாக்குதலை மறுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg