Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபிவிருத்திச் செயற்பாடே கட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: த.கலையரசன்

In
Updated: 09:43 GMT, Apr 22, 2018 | Published: 09:43 GMT, Apr 22, 2018 |
0 Comments
1219
This post was written by : poovannan

பொத்துவில் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமான த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கூட்டமொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “பொத்துவில் பகுதி இளைஞர்களின் நலன் கருதி தொழிவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க தொழிற்பேட்டைகளை அமைக்கவும் புலம்பெயர் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொத்துவில் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் பலர் எந்தவிதமான வாழ்வாதாரமும் இன்றி இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்க முன்வரவேண்டும்.

யுத்த காலங்களில் தங்களது காணிகளை வனவிலங்கு இலாகா தன்வசப்படுத்தியதால் இக்கிராம மக்கள் விவசாயத்தினை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அப்போது அந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் சுட்டிகாட்டியபோதும் அதற்கு அதிகாரிகள் தடையாக இருந்தனர்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபை, யாழ். காங்கேசன்துறை பிரதேச சபை உறுப்பினர் அமுதன் சேனாதிராஜா, பொத்துவில் உப தவிசாளர் பார்த்தீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg