Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே!

In இலங்கை
Updated: 11:25 GMT, Apr 22, 2018 | Published: 11:25 GMT, Apr 22, 2018 |
0 Comments
1465
This post was written by : Varshini

யாழ்.புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் இரண்டு புதிய கட்டடங்களை, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே திறந்துவைத்தார்.

அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்து சிறப்பித்ததோடு, புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தார்.

புங்குடுதீவு வாழ் மக்களின் கலை, கலாசார, தொழில் பயிற்சிகளை மையமாகக் கொண்டு புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களினால் அம்பலவாணர் கலையரங்கம் கடந்த வருடம் திறந்துவைக்கப்பட்டது.

அதன் மேலும் இரு கட்டடங்கள், உள்ளூர் மற்றும் கனடா வாழ் மக்களின் உதவியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்தியர் ஸ்ரீகிருஷ்ணா, பிரதேசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg