Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு!

In இலங்கை
Updated: 14:50 GMT, Apr 22, 2018 | Published: 15:30 GMT, Apr 22, 2018 |
0 Comments
1220
This post was written by : Ravivarman

ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு துபாய் அரசாங்கம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் உதயங்கவைக் கைது செய்வதற்கு நிதிக் குற்றவியல் விசாரணைப்பரிவு பல முயற்சிகளை எடுத்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்கா செல்வதற்கு முயற்சித்த வேளை உதயங்க வீரதுங்கவை, துபாய் விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்த சர்வதேச பொலிஸார் அவரை துபாய் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து, உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று துபாய் சென்றிருந்த நிலையில் அவரை ஒப்படைப்பதற்கு துபாய் அரசு மறுத்துள்ளதால் உதயங்கவை கைதுசெய்து இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg