Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு!

In இலங்கை
Updated: 16:11 GMT, Apr 22, 2018 | Published: 16:11 GMT, Apr 22, 2018 |
0 Comments
1385
This post was written by : Ravivarman

லண்டனில் இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் நேற்று (சனிக்கிழமை) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

லண்டன், கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தின், கலயாயே பியதஸ்ஸி நாயக்க தேரரின் தலைமையில் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

லண்டன் ஹெரோ லெஷர் நிலையத்தில் இடம்பெற்ற இப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் சுமார் நான்காயிரம் இலங்கையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கையின் சுதேச விளையாட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் போன்ற பல்வேறு அம்சங்களினால் புத்தாண்டு நிகழ்வும் களைகட்டியது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியாவில் வசிக்கும் சகல இலங்கையர்களுக்கும் மலர்ந்துள்ள சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டின் சட்டதிட்டங்களை விட மக்களின் பண்பாடும் பாரம்பரியமும் பலமிக்கதாகும் என்றும் இலங்கையின் கலாசார விழுமியங்களை மதித்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg