Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்!

In இலங்கை
Updated: 09:50 GMT, Apr 23, 2018 | Published: 09:50 GMT, Apr 23, 2018 |
0 Comments
1721
This post was written by : Yuganthini

ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரை எதிர்வரும் வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குத் தெரிவாகிய உறுப்பினர்களின் முதலாவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ஆனந்தசுதாகரை விடுதலை செய்யவேண்டுமென பிரதேசசபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார், விக்ரர் சாந்தி ஆகியோர் தீர்மானத்தைக்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கரைச்சி பிரதேச சபைக்கான பொதுநூலக காணி விடுவிக்கப்பட்டு நவீன வசதிகள் கொண்ட பொதுநூலகம் அமைக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, ஏற்கனவே ஒருங்கிணைவுக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் கீழ் வருகின்ற மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேசசபை பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பிரதேச சபையின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி முதல்மொழியாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், கரைச்சி பிரதேச சபையின் உப அலுவலமாகக் காணப்படுகின்ற கண்டாவளை, தனிப் பிரதேச சபையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg