Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

In இலங்கை
Updated: 09:42 GMT, Apr 23, 2018 | Published: 09:42 GMT, Apr 23, 2018 |
0 Comments
1056
This post was written by : Anojkiyan

முச்சக்கரவண்டிகளை செலுத்தும் சாரதிகள், 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்த சட்டம் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வருமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பிலான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த வயதெல்லை தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த அறிவிப்பும் தற்போதைய சாரதிகளை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg