Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய -மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயற்படுகின்றன: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 09:43 GMT, Apr 23, 2018 | Published: 09:43 GMT, Apr 23, 2018 |
0 Comments
1093
This post was written by : Kemasiya

ஊழல், கூட்டுசதி உள்ளிட்ட விவகாரங்களில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயற்படுவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“நீட் பரீட்சையை தமிழகத்திற்குள் கொண்டுவந்ததன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவத்தை படிக்க முடியாதளவிற்கு சதி வேலை செய்துள்ளனர் தற்போதைய மாநில மத்திய அரசினர்.

அதேபோன்று காவிரி விடயத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகியவை இணைந்து, இரட்டை குழல் துப்பாக்கி போன்று ஒரு கூட்டாட்சியை நடத்தி வருகின்றனர் என்பதே உண்மையென ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg