Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்தை சுத்தப்படுத்த இராணுவமா? – உண்மையில்லை என்கிறார் மேயர்

In இலங்கை
Updated: 16:45 GMT, Apr 23, 2018 | Published: 10:25 GMT, Apr 23, 2018 |
0 Comments
1231
This post was written by : Varshini

இராணுவத்தை பயன்படுத்தி யாழ். நகரை சுத்தமாக்குமாறு ஆளுநர் தன்னிடம் ஒருபோதும் கூறவில்லையென யாழ். நகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சுத்தப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்துமாறு மேயரிடம் அண்மையில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியதாக பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், யாழ். மாநகரசபையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மேயர் ஆர்னோல்ட், அதனை மறுத்துள்ளார். அவை திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு, தன்னுடைய அதிகாரத்தின் பிரகாரம் நகரத்தை சுத்தப்படுத்த இராணுவத்தையும் ஈடுபடுத்த தயாராக இருக்கின்றேன் என்றே ஆளுநர் குறிப்பிட்டதாக மேயர் சுட்டிக்காட்டினார்.

ஒரு மாகாணத்தின் ஆளுநரை, மாகாண மேயர் என்ற ரீதியில் மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக குறிப்பிட்ட ஆர்னோல்ட், அச்சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சிக்கலான விடயங்களை ஆரம்பத்திலேயே முன்னெடுக்காமல் இலகுவான விடயங்களை ஆரம்பித்து செயற்படுத்தினால் வினைத்திறனான சேவைகளை வழங்க முடியுமென ஆளுநர் ஆலோசனை வழங்கியதாகவும் ஆர்னோல்ட் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg