Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுவரெலியா தோட்ட தொழிலாளர்கள்

In இலங்கை
Updated: 11:13 GMT, Apr 23, 2018 | Published: 11:13 GMT, Apr 23, 2018 |
0 Comments
1054
This post was written by : Varatharajan Yuganthini

நுவரெலியா, லிலிஸ்லேண்ட் பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்து தருமாறுக்கோரியே தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், கறுப்பு கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகையில்,

“2015ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நாமும் அன்று முதல் இந்த மண்சரிவு காரணமாக உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, 20 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் 105 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பதை தோட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சிக்கும் நாம் வலியுறுத்தினோம்.

ஆனால் அதனை அமைப்பதற்கு புதிதாக இத்தோட்டத்தை நிர்வாகம் செய்யும் தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் தடை விதித்துள்ளது.

அதாவது அப்பகுதியிலுள்ள 5ம் இலக்க தேயிலை மலை மீள் பயிர்ச்செய்கை செய்ய இருப்பதாக தோட்ட நிர்வாகம் காரணம் காட்டுகின்றது.

இருப்பினும் 5ம் இலக்க மலை தனி வீடுகள் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம் எனவே நிர்வாகம் தற்பொழுது வழங்கவுள்ளதாக கூறப்படும் இடத்தில் தமக்கு வீடுகள் அமைத்து தர வேண்டாம்” என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்து கடந்த 7 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்த தோட்ட தொழிலாளர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg