Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேருந்து விபத்து: 29 பேர் காயம்!

In இலங்கை
Updated: 12:05 GMT, Apr 23, 2018 | Published: 12:05 GMT, Apr 23, 2018 |
0 Comments
1089
This post was written by : poovannan

ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று தியசிரிகம நிவ்வெளி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 04.00 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த 29 பேரும் காயமடைந்தது, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையி அனுமதிக்கப்பட்டோரில் 4 பேர் பெண்களும் 2 சிறுவர்களும் 23 ஆண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே இவ்விபத்து நேர்ந்தமைக்கான காரணமாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg