Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்

In இலங்கை
Updated: 12:20 GMT, Apr 23, 2018 | Published: 12:20 GMT, Apr 23, 2018 |
0 Comments
1047
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பகுதியில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகளவான விபத்துகள் இடம்பெறுவதால் அவைகளை கட்டுப்படுத்துவதற்கு தனியான செயலணி ஒன்று அமைக்கப்படவேண்டுமென, மண்முனை வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

மண்முனைபற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“மண்முனைப்பற்றை சிறந்த பிரதேசசபையாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

மேலும் எமது அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சில திட்டங்களை நாங்களே தயாரித்து முன்கொண்டு செல்லவேண்டிய நிலையுள்ளது.

அத்துடன் மண்முனைப்பற்றிலுள்ள வர்த்தக நிலையங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவுறுத்தல்கள் அனுப்பிவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு மாதகாலத்திற்குள் வர்த்தக நிலையங்களிலுள்ள பெயர்ப்பலகைகளை தமிழில் காட்சிப்படுத்தும் பணிப்புரைகள் பிரதேசபையினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேலும் இப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகளவான விபத்துகள் இடம்பெறுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கான் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’ எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg