Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு

In இலங்கை
Updated: 14:30 GMT, Apr 23, 2018 | Published: 14:25 GMT, Apr 23, 2018 |
0 Comments
1053
This post was written by : poovannan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர் த.சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தில், “தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்படவுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் சண்.தவராஜாவினால் இந்நூல் மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடு நிலைய மண்டபத்தில் 28ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் வெளியிடப்படும். இலங்கை வாசகர்களுக்காக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட இருக்கின்றது.

மேலும், “ஊடகம் – மக்கள் – அரசியல்” என்ற தொனிப்பொருளில் கல்லடியில் அமைந்துள்ள ஊடகக் கற்கைகளுக்கான நிறுவனமொன்றில் ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள நிகழ்வில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அ.நிக்சன் உட்பட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உரையாற்றவுள்ளனர்.

“தராகி” என்றழைக்கப்பட்ட தர்மரெட்ணம் சிவராம், கொழும்பில் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். இருப்பினும் இப்படுகொலை தொடர்பான விசாரணைகள் இதுவரையில் நிறைவடையவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg