Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை

In இலங்கை
Updated: 16:12 GMT, Apr 23, 2018 | Published: 16:12 GMT, Apr 23, 2018 |
0 Comments
1352
This post was written by : poovannan

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக கண்டறிவதற்காக பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. அவர்கள் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

பாகிஸ்தானின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் இக்குழுவில் உள்ளடங்கியிருப்பதுடன், சுகாதாரம் வீடமைப்பு, சுற்றுலா மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

மேலும் அதிவேகப் பாதை நிர்மாணம் மற்றும் பெற்றோலிய வளத்துறையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் உலகின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றினை இலங்கையில் நிர்மாணித்தல் தொடர்பாகவும் சுற்றுலா நகரங்கள் இரண்டினையும் குறைந்த செலவிலான புதிய வீடமைப்பு பகுதிகளை நிர்மாணித்தல் தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டன.

அமைச்சர் மலிக் சமரவிக்கிர, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் மற்றும் நிதி அமைச்சினதும் இலங்கை முதலீட்டு சபையினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg