Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு டமஸ்கஸை மீட்க தீவிரமடையும் இராணுவ தாக்குதல்

In உலகம்
Updated: 04:28 GMT, Apr 24, 2018 | Published: 04:28 GMT, Apr 24, 2018 |
0 Comments
1154
This post was written by : Risha

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டமாஸ்கஸின் தெற்கு பகுதியை மீட்கும் இராணுவ தாக்குதல்களை, சிரிய இராணுவத்தினர் தீவிரப்படுதத்தியுள்ளனர்.

டமாஸ்கஸின் தெற்கு பகுதியில் சிரிய இராணுவத்தினர் நேற்று குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகளும் வெளியிடபப்பட்டுள்ளன.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டமாஸ்கஸின் தெற்கு பகுதியில் சிரிய இராணுவத்தினர் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளியை சிரிய அரசாங்கத்தின் இராணுவ ஊடகப்பிரிவு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அல்-ஹஜர் அல் அஸ்வாட் மாவட்டத்தின் பல இடங்களிலும், யார்மூக் (Yarmouk) பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதும் குறித்த பகுதிகளிலிருந்து புகை கிளம்புவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

சிரியாவில் அமைந்துள்ள பலஸ்தீன அகதிகளுக்கான மிகப்பெரிய முகாம் ஒன்று பல வருடங்களாக இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

குறித்த பகுதியை இலக்கு வைத்தே சிரிய படையினர்; நேற்று இந்த தாக்குதலை முன்னெடுத்தனர். கடந்த சில மாதங்களாக கிழக்கு கௌட்டா பகுதியில் தொடர் மோதல் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த வாரம் சிரிய இராணுவத்தினரால் கௌட்டா பகுதி கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வடக்கு டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் பலர் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg