Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் 18 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபர் சிக்கினார்!

In
Updated: 05:54 GMT, Apr 24, 2018 | Published: 05:54 GMT, Apr 24, 2018 |
0 Comments
1137
This post was written by : Risha

சீன களியாட்ட விடுதியில் 18 பேரின் உயிரை காவுகொண்ட தீ விபத்திற்கு காரணமான சந்தேக நபர், தென் சீனப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த தகவல்களுக்கு பொலிஸார் வெகுமதிகளை அறிவித்து சில மணிநேரத்திற்குள் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ள மூன்று மாடி களியாட்டி விடுதியில் நேற்று நள்ளிரவில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. அனர்த்தத்தில் 18 பேர் உயிரிழந்ததுடன், ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொன்று என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்த நிலையில், பொது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமைய 32 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், இந்த தாக்குதலில் நோக்கம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

சந்தேகநபரின் கைதுக்கு வழிவகுக்கும் வகையில் தகவல்களை வழங்குவோருக்கு 2 இலட்சம் யுவான் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg