Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகரிக்கும் வெப்பத்தால் குடிநீர் பற்றாக்குறை: மக்கள் அவதி

In இந்தியா
Updated: 06:23 GMT, Apr 24, 2018 | Published: 06:23 GMT, Apr 24, 2018 |
0 Comments
1138
This post was written by : Varshini

வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் இந்தியாவின் பல மாநிலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது போதுமானதாக இல்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதி மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வெயிலின் கொடுமை, வறட்சியின் தாக்கம் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மக்களை வாட்ட, அவர்கள் குடிநீருக்காக பாத்திரங்களுடன் காத்திருக்கின்றனர். கத்திரி வெயில் மக்களை வாட்டி எடுக்க இந்தியாவின் பல பாகங்களிலும், வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல பின்தங்கிய கிராமங்களில் மக்கள் பல மைல்கள் தூரம் சென்று குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் வறட்சியின் காரணமாக ஜெய்பூர் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, நீர்த்தாங்கியில் கொண்டு வந்து விநியோகிக்கப்படும் குடிநீரைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் கிடைப்பதால், அது போதுமானதாக இல்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனினும், வறட்சியான இந்த பருவக்காலத்தில், சகல மக்களுக்கும் குடிநீரைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றார்கள்.

தாகத்திற்காக தவித்திருக்கும் தங்களுக்கு வழங்குகின்ற நீரை உரிய முறையில் நேரத்திற்கு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg