Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்கொடுமைகளை தடுக்க மனநிலை மாற வேண்டும்: பொலிவூட் நட்சத்திரம்

In இந்தியா
Updated: 06:56 GMT, Apr 24, 2018 | Published: 06:56 GMT, Apr 24, 2018 |
0 Comments
1204
This post was written by : Varshini

பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு ஒவ்வொரு ஆணின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமென மூத்த பொலிவூட் நட்சத்திரமான நஸீருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

நஸீருதீன் ஷா நடிப்பில் உருவாகிவரும் ஹோப் ஆர் ஹூம் (Hope aur Hum) என்ற பொலிவூட் நகைச்சுவை திரைப்படத்தின் முன்னோட்டம், மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அவர் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”அனைவரையும் முழுமையாக மாற்றுவதைப் பற்றி நாம் பேசி வருகின்றோம். தலைமுறையையே மாற்ற வேண்டுமென கூறி வருகின்றோம். ஆனால் அது நடக்கப்போவதில்லை. எமது தனிப்பட்ட வாழ்க்கையில் எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் மாற வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்காக எந்த நேரமும் உடன் யாரும் செல்ல முடியாது. ஒவ்வொரு பெண்ணும் தனது கைப்பையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு செல்ல முடியாது. எல்லா பெண்களும் தற்காப்பு கலையை கற்றுக்கொண்டிருக்க முடியாது. எம்மால் செய்ய முடிந்தது ஒன்றுதான். எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை மற்றும் வடக்கு உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ஆகிய இரு விடயங்களும் இந்தியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முழு நாடே கொந்தளித்துப் போயுள்ள இவ்விடயங்கள் தொடர்பாக சகல நிகழ்வுகளிலும் பேசப்பட்டு வருவதோடு, குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டமூலம் அண்மையில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg