Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டம்

In இந்தியா
Updated: 08:02 GMT, Apr 24, 2018 | Published: 08:02 GMT, Apr 24, 2018 |
0 Comments
1126
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட  தொழிற்சங்கத்தினர் இணைந்து பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

தஞ்சையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில்  தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இப் பேரணியை முன்னெடுத்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு வலியுறுத்தியும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளுமாறு கூறியும் கோஷமெழுப்பினர்.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் எங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி பிரதமர் மோடியை சந்தித்து காவிரி விடயம் தொடர்பில் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg