Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறையில் குப்பைகளை உண்ட 6 யானைகள் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 11:21 GMT, Apr 24, 2018 | Published: 11:21 GMT, Apr 24, 2018 |
0 Comments
1172
This post was written by : Anojkiyan

அம்பாறை – தீகவாபி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் மத்திய நிலையமொன்றை உரிய முறையில் பராமரிக்காமையினால் இதுவரை குப்பைகளை உண்ட 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக அம்பாறை வன சீவராசிகள் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களில் புகுந்து பிரதேசவாசிகளின் வீடு மற்றும் பயிர்களை நாசம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்படுவதால், சுகாதார தன்மை காரணமாக பல நோய் தொற்றுகள் உருவாகுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த குப்பை சேகரிக்கும் மத்திய நிலையத்தை உரிய முறையில் பராமரிக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளை கோரியுள்ளனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg