Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

13 வருடங்கள் மகளை தொலைத்த தாயின் கண்ணீர் கதை!

In இலங்கை
Updated: 11:58 GMT, Apr 24, 2018 | Published: 11:58 GMT, Apr 24, 2018 |
0 Comments
1343
This post was written by : Anojkiyan

சவுதி அரேபியாவின் தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெண்ணை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க, அரசியல் தலைவர்கள் நடிவடிக்கை எடுக்குமாறு குறித்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி, ஹட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த சுப்பையா விக்னேஷ்வரி என்ற பெண், தரகர் ஒருவரின் உதவியோடு பணிப்பெண் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

எனினும், 13 வருடங்கள் கடந்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்ட விதிகளை மீறி தனது மகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல் வைத்துள்ளமையை அரசாங்கம் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுத் தரும்படி இப்பெண்ணின் தாயான விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது 23 வயதில் கம்பளையில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் தரகர் ஒருவரின் உதவியுடன் சவுதி சென்ற குறித்த பெண், கடந்த 13 வருட கால பகுதியில் மூன்று முறை மாத்திரமே தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் சவூதி நாட்டுக்கு சென்றதையடுத்து ஒரு வருட காலப்பகுதியில் பெண்ணின் தந்தை சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்ததாகவும், தனது கணவர் உயிரிழக்கும் பொழுது கையில் நூறு ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டு இறுதி கிரியைகளை உறவினர்களின் உதவிகளோடு செய்து முடித்ததாகவும், தந்தை உயிரிழந்த விடயம் கூட இதுவரை காலமும் மகளுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

ஆனால் வெளிநாட்டுக்கு சென்ற பெண் இன்று வரை தமக்கு பணங்கள் அனுப்பாமல் தொலைத்தொடர்புகளும் சீராக இல்லாமல் இன்று வருவார் நாளை வருவார் என்ற ஏக்கத்துடன் வாழும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதேவேளை தொலைபேசி மூலமாக தன்னுடைய மகளுக்கு தொடர்பை ஏற்படுத்தும் பொழுது ஸ்ரீலங்கா என்ற வசனத்தை கேட்டவுடனேயே என் மகள் வசிக்கின்ற வீட்டிலிருந்து பதில் ஏதும் கிடைக்காமல் தொலைபேசியை துண்டித்து விடுவதாகவும் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் கடைசியாக கிடைத்த தொலைபேசி ஊடாக கடந்த வருட இறுதிக்குள் தான் இலங்கைக்கு வந்துவிடுவதாக மகள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரையும் மகள் நாடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்துள்ள நிலையில் பலரிடமும் இது தொடர்பாக தெரிவித் போதிலும் எவரும் எமக்கு உதவுவதாக தெரியவில்லை. எனினும் 13 வருட காலமாக மகள் உழைத்த பணம் கூட எமக்கு தேவையில்லை. மகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வந்தால் போதும் என அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg