Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் அறுநூறு குளங்களில் 44 குளங்கள் மாத்திரமே விவசாயத்திற்கு உகந்தவை!

In இலங்கை
Updated: 15:28 GMT, Apr 24, 2018 | Published: 15:28 GMT, Apr 24, 2018 |
0 Comments
1051
This post was written by : Anojkiyan

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுநூறு வரையான சிறுகுளங்கள் காணப்பட்டாலும் இதில் 44 வரையான சிறிய குளங்கள் மாத்திரமே நீரப்பாசனம் செய்து விவசாயம் செய்யக்கூடிய குளங்களாக காணப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வறட்சியான காலநிலை காரணமாக விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 600 வரையான சிறுகுளங்கள் காணப்பட்டாலும் 44 வரையான குளங்கள் மாத்திரமே நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்யக்கூடியதாக இருக்கின்றன.

இதில் சில குளங்கள் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குளங்களை அடையாளப்படுத்தி எல்லையிடும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg