Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களுக்கான தீர்வை நாமே தேடிக் கொள்ள தயங்க மாட்டோம்: சம்பந்தன் ஆவேசம்

In இலங்கை
Updated: 16:46 GMT, Apr 24, 2018 | Published: 16:46 GMT, Apr 24, 2018 |
0 Comments
1281
This post was written by : Anojkiyan

ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழாவில், சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டை பிரிப்பது எமது நோக்கம் அல்ல. ஒருமித்த நாட்டுக்குள் நாங்கள் தனித்த ரீதியில் வாழ்ந்த பகுதிகளில் அதியுட்ச அதிகூடிய அதிகார பகிர்வு மூலமாக எமது உள்ளக சுய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் மரியாதையாக, சுய மரியாதையுடன் கௌரவமாக, மதிப்பாக வாழ வேண்டும் என்பதே எங்களது கொள்கை.

கடந்த 1987ஆம் இலங்கைக்கு இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. இந்த கடமையிலிருந்து இந்தியா விலக முடியாது.

எமது நாட்டுக்குள், எமது மக்களுடன் பேசி நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒர் தீர்வை நாங்கள் ஏற்படுத்த விரும்புகின்றோம். அதற்கான தீர்வு கிடைக்காவிட்டால். அவ் விதமான நியாயமான தீர்வு கிடைக்க எது செய்ய வேண்டுமே, அதை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg