Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு: தமித குமாரசிங்க

In இலங்கை
Updated: 04:14 GMT, Apr 25, 2018 | Published: 04:14 GMT, Apr 25, 2018 |
0 Comments
1072
This post was written by : Ravivarman

சந்தையில் உராய்வு நீக்கி எண்ணெய்க்கு  அதன் தரம் மற்றும் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற உராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும், அவர் அங்கு உரையாற்றுகையில்,

“உராய்வு நீக்கி எண்ணெயை பயன்படுத்தும் பாவனையாளர்களின் நலன்கருதியும் அவர்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இதற்காக கொள்கை ரீதியாகப் பல ஆலோசனைகளையும் தயாரிக்க வேண்டிய தேவையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் உராய்வு நீக்கி எண்ணெய்ச் சந்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக எழுத்து மூலமாக எமது ஆணைக்குழு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து இன்று பொதுமக்களிடம் கருத்துக்களை வாய்மொழி மூலமாகக் கேட்டறிந்துகொண்டது. இதன்போது சுமார் 300 க்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஆணைக்குழு உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில் அதன் தரம் மற்றும் விலை தொடர்பான பிரதிபலிப்பை வெளியிடவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு யோசனைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளன’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg